தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தின் (Online) ஊடாக பெறும் காலத்தை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் வலைத்தளமான www.ncoe.moe.gov.lkக்குள் உள்நுழைவதன் ஊடாக பயிற்சியாளர்கள் தங்கள் தகவல்களை உள்ளிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2018 ஆண்டுகளில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்களுக்கான தகவல்களை இணையத்தளத்தில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.