29.1 C
Jaffna
Friday, May 7, 2021

விமானங்களில் கனடா வந்தடைந்த 5,000-க்கு மேற்பட்ட கெரோனா தொற்றாளர்கள்! வெளியாகியுள்ள அதிர்ச்சித்தகவல் !

விமானங்கள் மூலம் கனடா வருவோரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து இவ்வாறு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவா்களில் மூன்றில் ஒருவர் கொரோனா வைரஸின் கவலைக்குரிய புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளமையும் அமையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இல்லை என எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளை சமர்ப்பித்த போதும் கனடாவில் வந்திறங்கியவுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3,748 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கனடா பொது சுகாதார முகாமை தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கனடாவுக்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,411 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்தத் தரவுகள் கூறுகின்றன.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட 5 ஆயிரம் வரையானோரில் 1,566 பேர் கவலைக்குரிய திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 95 வீதத்துக்கு அதிகமானோர் பிரித்தானியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட பி .1.1.7 திரிபு தொற்றுக்குள்ளானவர்களாவர்.

கனடாவின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் விமானங்களில் வந்த பின்னர் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை குறைவானதாகும். பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 29 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் மொத்த் 342,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய திரிபு வைரஸ்கள் நாட்டில் மேலும் அதிகமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் விமானப் பயணங்களைக் கட்டுப்படுத்துமாறு அல்லது தடை விதிக்குமாறு மாகாண முதல்வர்கள் கனேடிய மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.

ஒன்ராரியோவுக்குள் புதிய திரிபு வைரஸ்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருவது குறித்து நான் கவலையடைந்துள்ளேன் என அம்மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். புதிய திரிபு வைரஸால் அதிகம் இளம் வயதினர் பாதிக்கப்படுகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதிகளவில் இளையவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அவா் கூறினார்.

இந்நிலையில் புதிய திரிபுகள் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க தெளிவான, உறுதியான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை எனவும் டக் போர்ட் வலியுறுத்தி வருகிறார்.

இவ்வாறான நிலையிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களை கனேடிய மத்திய அரசு கடந்த ஏப்ரல் 23 முதல் தடைசெய்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Stay Connected

6,870FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! பரீட்சைகள்?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...