March 5, 2021, 12:31 pm

சொந்த கோவிட்19 தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்க தயாராகின்றது கனேடிய மத்திய அரசு!

கனடாவில் கோவிட்19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குமான திட்டங்களுக்கு கனேடிய அரசு உதவிகளை அதிகரிக்கும். அத்துடன், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கோவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் கனடா நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில் கனடாவின் சொந்த தடுப்பூசி மற்றும் மருத்துவ திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார்.

கோவிட்19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும், தரமான சிகிச்சைகளை வழங்கவும், தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான எங்கள் திறனை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் கனடா அரசு துரிதமாகச் செயல்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று நோயில் இருந்து கனேடியர்களைப் பாதுகாக்க கனடாவின் சொந்த தடுப்பூசி திட்டங்களில் முதலீடு செய்வதும், எதிர்காலத்தில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு கனடாவை தயார் நிலையில் வைத்திருப்பதும் இந்தத் திட்டங்களின் நோக்கமாகவும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மொன்றியலில் உள்ள கனடாவின் உயிரியல் தொழில்நுட்ப மையத்தின் தேசிய ஆராய்ச்சி பேரவை அதன் கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளைத் தொடரும் நோக்கில் நோவாவாக்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்துள்ளார்.

கனடாவில் கோவிட்19 தடுப்பூசி, சிகிச்சை செயற்றிட்டங்களை ஆதரிப்பதற்கான முதலீடுகளையும் பிரதமர் அறிவித்தார்.

கனடா அரசு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கும். இதனால்தான் கோவிட்-19 தடுப்பூசி ஆய்வு, சிகிச்சை மற்றும் தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் அரசாங்கம் அதிக முதலீடுகளைச் செய்யும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.

கனேடியர்களைப் பாதுகாப்பதற்கும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் கனேடிய நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து கூட்டுச் சோ்ந்து செயற்படுவோம். இதன்மூலம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஒரு நாட்டை நாம் ஒன்றாக உருவாக்க முடியும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்

இரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.கிளிநொச்சி...

தொகுப்பாளர் ரக்ஷன் அவரது மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி

பிரபலங்கள் சிலர் தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.அப்படி செய்வது அவர்களது விருப்பம். தொகுப்பாளர் ரக்ஷனும் அப்படி தான், இதுவரை தனது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை...

இறப்பர் செய்கையை மேம்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி இந்த குழுவிற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் தலைமைதாங்கவுள்ளார்.இறப்பர் செய்கையின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த குழு...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிரிந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஒரு அணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுச் சென்றவர் அந்தக் கட்டமைப்புக்குள்ளே மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமைப்பட வேண்டும். போராட வேண்டும். அதனைவிடுத்து புதிய அமைப்பை, கட்சியை உருவாக்குவது ஒரு ஏமாற்று வேலைத்திட்டமாகவே இருக்குமென்று அம்பாறை...

முதலாவது இனிங்சிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 131 ஓட்டங்கள்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.போட்டியில் தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி, சற்று...