February 25, 2021, 9:30 pm

கனடாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் களத்தில் குதிக்க பிரதமர் ட்ரூடோ திட்டம்!

அரசியலில் இருந்து விரைவில் விலகும் திட்டமேதும் என்னிடம் இல்லை. கனேடியர்களுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை செய்யவே நான் விரும்புகிறேன் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஊடகத்துக்கு நேற்று வியாழக்கிழமை வழங்கிய பேட்டியில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டார்.

ட்ரூடோவின் ஆளும் லிபரல் அரசுக்கு மத்தியில் பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சிகளை நம்பியே ஆட்சியைத் தக்கவைக்கவேண்டியுள்ளது. அத்துடன், முக்கிய திட்டங்களையும் எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது.

இந்நிலையில் லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த ஆண்டு ஒரு தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். மேலும் தற்போதைய பிரதமர் ட்ரூடோ எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்க விரும்புகிறார்? என சிலர் தனிப்பட்ட முறையில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தற்போது 49 வயதான ட்ரூடோ நவம்பர் 2015 இல் கனடா பிரதமராக பொறுப்பேற்றார். இடைவிடாத கோவிட்-19 நெருக்கடியால் சில சமயங்களில் அவர் சோர்வுற்றிருந்ததாகத் தோன்றியது. தொற்றுநோயைக் கையாள்வது கடினம் என்று அவர் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் அடுத்த தோ்தலில் ட்ரூடோ போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடையளிக்கும் வகையில் அரசியலில் இருந்து விலகுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று அவா் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நாட்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்றவேண்டியுள்ளது என நேற்று வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் பேட்டியில் அவர் கூறினார். தனது அரசியல் அபிலாஷைகள் முடிந்துவிடவில்லை என்பதற்கான ட்ரூடோவின் தெளிவான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது.

பெண்ணியம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே ட்ரூடோ அதிகாரத்திற்கு வந்தார். இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதாக அவா் உறுதியளித்தார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கையாள்வது, பின்னர் தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.

தற்போது தனது நெருங்கிய கூட்டாளியான துணைப் பிரதமரும் மற்றும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்டை அரசியலில் அவர் பெரிதும் நம்பியிருக்கிறார்.

இந்நிலையில் ப்ரீலாண்ட் லிபரல் தலைவரா? எனக் கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த ட்ரூடோ, என்னால் முடிந்த அளவுக்கு அரசியல் ஊடாக கனடியர்களுக்கு சேவை செய்யவே நான் எதிர்பார்க்கிறேன். எனினும் அடுத்து என்ன நடக்கும்? என ஊகிக்க முடியாது என்றார்.

இதேவேளை, தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ட்ரூடோ அரசு 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 100 பில்லியனை செலவிட திட்டமிட்டுள்ளதாக ட்ரூடோ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...