January 27, 2021, 11:19 am

கனடா Mississauga வில் இடம்பெற்ற விபத்தில் இழந்த காலை பாதுகாப்பாக வைத்திருக்கும் இளைஞர்!

கனடாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இழந்த காலை இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக வைத்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவில், காரை மோதி இரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பினார் சாரதி ஒருவர்.

Mississauga என்ற இடத்தில் நடந்த அந்த விபத்தில் காலை இழந்த Justin Fernandes (24) என்ற அந்த இளைஞரால், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

தன் காலை யாராவது பாடம் செய்து, அதாவது விலங்குகளின் உடலை பாடம் செய்து பத்திரப்படுத்துவதுபோல், பதப்படுத்தி தரமுடியுமா என பேஸ்புக்கில் கேட்டிருந்தார் Justin.

ரொரன்றோவிலுள்ள The Prehistoria Natural History Centre (PNHC) என்னும் அமைப்பு, Justinக்கு இலவசமாக உதவ முன்வந்தது.

அதன்படி, அந்த அமைப்பு அந்த காலை இறுதிச்சடங்கு செய்யும் அமைப்பு ஒன்றிடமிருந்து பெற்று, அதன் மீதிருந்த தசை முழுவதையும் அகற்றிவிட்டு, அந்த எலும்பை பதப்படுத்தி Justinஇடம் கொடுத்துள்ளது.

வாகனத்தை ஒருவர் மீது மோதிவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவிடும் பலர் இருக்கிறார்கள், ஆனால், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.

தன்னுடைய இழப்பை எப்படியாவது ஈடு செய்யவேண்டுமென்று விரும்பிய Justin, அதை இந்த வகையில் செய்து தனது துக்கத்தை முழுமை செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையில், Justinமீது காரை மோதி அவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பிய 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.