January 21, 2021, 1:59 am

கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் செய்துள்ள நெகிழ்ச்சியான செயல்!

கனடாவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றார்.

குருபாக் சிங் என்ற அந்த தொழிலதிபர் ஒரு வாரத்தில் கனடா திரும்ப வேண்டிய நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கனடா செல்வதை அவர் ஒத்திவைத்துள்ளார்.

பஞ்சாபை பூர்விகமாக கொண்ட குருபாக் சிங் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் டொரொண்டோ நகரில் தங்கி சுயமாக தொழில் செய்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம் இந்தியாவிற்கு அவர் திரும்பியுள்ளார்.

அவ்வபோது இந்தியாவிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் கடந்த வாரம் அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

பஞ்சாபின் நவா ஷார் பகுதியில் பாரம்பரியம் மிக்க இல்லத்தைக் கொண்டிருந்தாலும், அதனை விடுத்து தில்லி எல்லையில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வருகை புரிந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குரல்கொடுத்து வருகிறார்.

அவர் கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தை அறிந்து அதில் பங்கெடுப்பதற்காக கனடாவிலிருந்து கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தேன்.

விவசாயிகளின் நில உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். அடுத்த வாரம் கனடா செல்வதற்காக பயணச்சீட்டுகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும், விவசாயிகளின் போராட்டத்தைக் கண்ட பிறகு அந்த முடிவைக் கைவிட்டேன். போராட்டக்களத்தில் நானும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Articles

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...

இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- பிரதமர் மஹிந்த கோரிக்கை!

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...