கண்டி மாவட்டத்தில் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் வரை அக்குரணை பிரதேசத்தில் 280 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.