இந்தத் திருட்டுகளில் தங்கமாலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவே அதிகமாக உள்ளன. மேலும் தனியாகவுள்ள பெண்கள், தனிமையான வீதிகள், இருண்ட வீதிகள் என்பவற்றை திருடர்கள் இலக்கு வைப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்துப்படி, பெரும்பாலான சம்பவங்கள் தனிமையான, இருண்ட வீதிகளில் நிகழ்கின்ற அதேவேளை கழுத்தணிகளைப் பறிகொடுத்த பெண்களில் பெரும்பாலானோர் தனிமையிலுள்ள பெண்களாவர்.
இத்தகைய திருட்டுகள் இடம்பெறாது தடுக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் மோட்டார் சைக்கிள்களை சரியான பாதையில் அல்லது தரிப்பிடங்களில் நிறுத்துமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்