கஞ்சாவை ஒரு “ஆபத்தான மருந்து” என்ற நிலையிலிருந்து விலக்க ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஏற்ப உள்நாட்டுச் சட்டங்களை தளர்த்துமாறு அனைத்து இலங்கை சுதேச மருத்துவ சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர் கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் டெனிஸ்டர் எல் பெரேரா கூறுகையில், கஞ்சாவை சட்டபூர்வமாக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கஞ்சாவின் மருந்துக்கு மதிப்பு அதிகமாக உள்ளது.மேலும் சில நாடுகள் அவற்றைப் பயன்படுத்தி மருந்து உற்பத்தி செய்யும் சட்டங்களை தளர்த்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.