January 25, 2021, 2:15 pm

கசிப்பை கட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மகஜர் கையளித்துள்ளனர்

கண்ணகிபுரம் மேற்கு மக்கள் தமது பிரதேசத்தில் உள்ள கசிப்பை கட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மகஜர் கையளித்துள்ளனர். இன்று காலை இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு சென்ற குறிதத் கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று மகயரை கையளித்துள்ளனர்.

தமது பிரதேசத்தில் காணப்படும் கட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி எதிர்கால சந்ததியின் வாழ்விற்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தி தருமாறு தெரிவித்தே பிரதேச மக்களால் ஒப்பமிடப்பட்டு குறித்த மகயர் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பில் அக்கராயன் பொலிசாருக்கு தகவல் வழங்குகின்ற போதிலும், அத்தகவல் மீண்டும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களிற்கு திரும்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பொலிசார் மீது நாம் குற்றம் சொல்லவில்லை. ஆனாலும் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவபவர்கள் பொலிசாரின் துணை இருப்பது போன்று காண்பித்துக்கொள்கின்றனர். 
தகவல் வழங்கப்பட்டது அக்கராயன் பொலிசாருக்கு என அறிந்ததும், அக்கராயன் பொலிசாரா? உடனே கைதானவர்களை வெளியே எடுக்கின்றோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தே நாங்கள் இன்று இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.100

Related Articles

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...