January 25, 2021, 2:29 pm

ஒரு தொகை பணம் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது!!!

போதைப்பொருள் கடத்தலில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோடியே 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிககளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேக நபர்களில் ஒருவரின் வீட்டில் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகை ஆகியவற்றுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...