January 27, 2021, 11:20 am

ஐ.நா.வின் புதிய பிரேரணை தொடர்பில் இந்தியாவுடன் விரைவில் பேச்சு!: இரா.சம்பந்தன்

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சு நடத்தும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார். இதன்போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன

மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தம்மை ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமையை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி விடயத்தையும் தெரிவித்தார்.

இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் திடீர் பயணம் மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார்.

மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலும், மாகாண சபை முறைமைக்கு எதிராக ராஜபக்ச அரசிலுள்ள அமைச்சர்கள் சிலரும், கடும்போக்குவாத பௌத்த தேரர்களும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையிலும் ஜெய்சங்கரின் இலங்கைக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகையை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ‘டுவிட்டர்’ பதிவில், “வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாளை விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 07ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறுமட்டப் பேச்சுகளிலும் ஈடுபடவுள்ளார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.