நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட அளவெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஏழு பேரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் தொடர்பில் வெளியிட்டு வரும் நாளாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு ஊழஎனை-19 பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – ஒருவர். (வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது).
வவுனியா பொது வைத்தியசாலை – ஒருவர். (தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்)
அளவெட்டி – 3 பேர் (ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்)
மானிப்பாய் – ஒருவர்.
நவாலி – ஒருவர்.