எல்லாளன் எங்கள் குல மன்னன்
சொல்லால் வீரம் புகட்டாது
வில்லால் வீரம் படைத்த மன்னன்
தாழ்ந்த தமிழை ஓங்கசெய்தவன்
வீழ்ந்த இனத்தை வரலாறாய்
பாடச்செய்தவன்
பண்பாட்டை பேணிக்காத்தவன்
துன்புற்றோரை இன்புறச்செய்தவன்
வனப்பாய் இயற்கையை
மனப்பாயில் மகிழ்வாய் கிடத்தியவன்
எதிர்த்தவன் எவராகினும்
அதிர்வாய் புடம் போட்டவன்
துஷ்ட படைகளை
நஷ்டம் கணாச்செய்தவன்
முதிர்ந்த அகவையிலும்
உதிராத ஆளுமையோடு
வேடகுலத் தலைவனோடு
தடம் புரளாது போர் புரிந்தவன்
சதி கொண்டு அவனின்
விதி தனை முடித்தனர்
வென்றவர் புகழை பிரபஞ்சம்
கொன்றவராய் தூர்த்தினர்
சதி தந்த வெற்றி சாதனை படைக்காது
விதியென்று அலைந்தால் விடையேதும் கிடைக்காது
சரித்திரத்தை எந்த சந்ததியும் ஒதுக்கிடாது
தரித்திரம் பிடித்தவனோடு எந்த உயிரும் இணைந்திடாது
வாழும் தமிழ் வையகம் முற்றும் வரை
வெல்லும் தமிழ் கலியுகம் மாறும் வரை