January 21, 2021, 2:55 am

எங்கள் மீது கை வைக்கதே ! யாழில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்?

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்ட நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி இன்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்...

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்...

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

தேங்காய்களை திருடியவருக்கு நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரமொன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...