உலகில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நாடுகளின் பட்டியலில் கனடா தொடந்தும் முன்னணில் உள்ளதாக சா்வதே திங் ராங்ஸ் (Think-tank’s) அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலம்பெயர்ந்தவா்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நட்புறவான புலம்பெயர்ந்தவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் நாடாக கனடா உள்ளது என திங் ராங்ஸ் இடப்பெயர்வு கொள்கைக் குழுவின் ஆராய்ச்சி இயக்குனர் தோமஸ் ஹட்ல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து நாட்டுக்குள் வரும் புதியவர்களுக்கு சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை அளிக்கும் புலம்பெயர்ந்தோருடன் நட்பு கொள்கைகளைப் பேணும் நாடுகள் பட்டியலில் உலகில் நான்காவது இடத்தை கனடா பிடித்ததுள்ளது.
பிரதம மந்திரியாக ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையில் கனடா கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 2015 இல் வெளியான புலம்பெயர்ந்தோருக்கு நட்புறவான மிப்பெக்ஸ் (MIPEX) தரவரிசையில் கனடா ஆறாவது இடத்தில் இருந்தது.
எனினும் 2015 முதல் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையில் கனடாவின் லிபரல் கட்சியின் ஆட்சிக் காலங்களில் புகலிடம் கோருவோருக்கான சலுகைகள் கனடாவில் மேம்பட்டுள்ளன. சுகாதார அணுகல் மற்றும் 2017 குடியுரிமைச் சட்டத்தின் திருத்தங்கள் இவற்றில் முக்கியமானவையாகும்.
கனடாவின் மிகப் பெரிய பலம் அதன் பாகுபாடுகளுக்கு எதிரான கொள்கைகளில் உள்ளதாக திங் ராங்ஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் சம உரிமைக் கொள்கை, பல்கலாசாரப் பண்பு உள்ளிட்டவற்றால் புலம்பெயா்ந்தவர்களுக்கான நட்புறவுச் செயற்பாட்டில் அந்நாடு அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கனடாவில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர். இதனால் புலம்பெயர்ந்தோர் குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமையை ஒப்பீட்டளவில் கனடாவில் விரைவாகப் பெறக்கூடியதாக உள்ளது.
இடம்பெயர்வு கொள்கைக் குழு மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பார்சிலோனா மையம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இந்த சமீபத்திய மிப்பெக்ஸ் குறியீட்டு அறிக்கை, 2019 இல் முடிவடைந்த ஐந்து ஆண்டுகள் கவனித்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.