29.1 C
Jaffna
Friday, May 7, 2021

பங்களாதேஷில் இரண்டு படகுகள் மோதி விபத்து – 25 பேர் பலி !

பங்களாதேஷ் – பத்மா ஆற்றில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பலியாகினர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். வேகப் படகொன்று மற்றொரு படகுடன் மோதி இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பங்களாதேஸ் மடரிபூர் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மிராஜ் ஹொசைன் கூறினார்.

சம்பவத்தை அடுத்து களமிறங்கிய மீட்புப் படையினர் இறந்தவர்களின் 26 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மிராஜ் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற நீர்வழிப் பயணங்களால் ஏற்படும் விபத்துக்களால் பங்களாதேஷில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் ஷீட்லக்யா ஆற்றில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய கப்பல் ஒன்று பெரிய கப்பலுடன் மோதியதில், குழந்தைகள் பெண்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Stay Connected

6,870FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! பரீட்சைகள்?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...