30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

கனடாவில் கத்திக்குத்து ! பெண்ணொருவர் பலி – 6 பேர் காயம்

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு வன்கூவரில் உள்ள நூலகம் மற்றும் அதன் சூழலில் ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஒருங்கிணைந்த மனிதக் கொலை புலனாய்வுக் குழு அதிகாரி பிராங்க் ஜாங் தெரிவித்தார்.

இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சிகளுக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை எனவும் ஜாங் கூறியுள்ளார்.

சந்தேக நபர் வன்கூவரில் உள்ள நூலக சூழலில் வைத்து முதலில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். அந்தப் பெண் இரத்தம் சொட்டிய நிலையில் காணப்பட்டார். அத்துடன், அந்தச் சூழலில் சில மீற்றர்கள் தொலைவில் வேறு சிலரும் குத்தப்பட்டனர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியுடன் அங்கு நின்ற நபர் இலக்குவைத்து யாரையும் குத்தியதாகத் தெரியவில்லை. தனக்கு எதிரே காணப்படும் எவரையும் அவர் ஆவேசத்துடன் குத்தியதாகவே தோன்றியது எனவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் உள்ளோம். உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டும் வர பிரார்த்திக்கிறேன் என கனேடியர் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவா் அனுதாபம் தெரிவித்துள்ளார். இது ஒரு மோசமாக வன்முறைச் சம்பவம் எனவும் அவா் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...