29.4 C
Jaffna
Monday, April 19, 2021

மியான்மரில் சிறுமி ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை !

மியான்மர் இராணுவத்தினரால் 7 வயதுச் சிறுமி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாண்டலே நகரில் உள்ள சான் மியா தாசி எனும் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உடைத்துச் சோதனையிட்ட இராணுவத்தினர், தந்தையில் மடியில் இருந்த கின் மியோ சிட் என்ற இந்தச் சிறுமியைச் சுட்டுக் கொன்றதாக மாண்டலே நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவேளை, இந்தச் சிறுமி ஓடிச்சென்று தந்தையின் மடியில் அமர்ந்துள்ளார். இந்த வேளையில் தந்தையை நோக்கி இராணுவத்தினர் சுட்டபோதே இந்த சிறுதி மீது குண்டு பாய்ந்ததாக மியான்மர் நவ் எனும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மிகக் குறைந்த வயதுள்ளராக இந்தச் சிறுமி உள்ளார்.

மாண்டலேவில் திங்கட்கிழமை 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான மறுநாளே 7 வயதுச் சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டமை அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமியின் 19 வயது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மியான்மரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராட்டங்களின்போது பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மொத்த 261 பேர் இதுவரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவிக் கூட்டமைப்பு எனும் குழு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 164 தான் என மியான்மர் இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...