அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பெய்துவரும் கடும் மழை காரணமாக, உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம் உள்ளதாக அந்தநாட்டு அவசரநிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸில், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.