March 7, 2021, 12:05 pm

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டங்கள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத்துவிதல் முதல் பொலிகண்டி வரையிரலான மக்கள் எழுச்சிப் போராட்டமும் உரமூட்டியிருந்தது.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் இக்கோரிக்கை வலிமைபெறும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் கெக் நகரில் இருந்து ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகின்றது. தலைநகர் பரிஸ், புறநகர சபை வளாகங்களில் இனவழிப்பினை வெளிப்படுத்தும் ஒளிப்பட காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை கனேடிய தலைநகர் ஒட்டாவா அரச மையம் நோக்கி நீதிக்கான வாகன பேரணியொன்றும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீர்மான வரைவினை கொண்டு வருகின்ற முகன்மை நாடுகளை நோக்கிய அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து போராட்டங்களும் கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் கூர்மைப்பெற்றுள்ளன.

புதிய தீர்மான வரைவானதுஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதானமாக இக்கையெழுத்து இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

Stay Connected

6,583FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...