March 7, 2021, 12:12 pm

அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருகின்றன.

அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Related Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

Stay Connected

6,583FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...