இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்வத்தில் குறைந்த வலுக் கொண்ட குண்டு வெடித்துள்ளதாகவும், இதன்போது சில கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் டெல்லி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

