அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை ஜனநாயக கட்சியினர் சற்று முன்னர் சனப்பிரதிநிதிகள் சபையில் வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்தமை, மக்களை கலகத்தில் ஈடுபட தூண்டி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தினார் என அப்பிரேரணை தெரிவிக்கின்றது.
கிளர்ச்சியை தூண்டினார் என்ற குற்றச்சாட்டினையே ஜனநாயக கட்சியினர் முக்கியமானதாக முன்வைத்துள்ளனர்.