March 7, 2021, 5:34 pm

அமெரிக்க வன்முறையில் உயிரிழந்த பெண்ணின் பின்னணி தகவல்!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையில் இறந்த பெண்ணின் பின்னணி விவரங்களை அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நினைத்தபடி முடிவடையவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவில் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். ஜோ பைடனுக்கு எதிராக குரல் எழுப்பினர். அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடாதென முழக்கமிட்டனர்.

பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் தெரியவந்துள்ளன. ஆஷ்லி பாபிட் என்பது அவரின் பெயர். அந்தப் பெண் உள்ளூர் ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கலவரம் தொடர்பாக தொடர்ந்து ட்வீட் செய்துகொண்டு இருந்துள்ளார்.

கலவரம் தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் “எதுவும் நம்மைத் தடுக்காது… அவர்கள் முயன்றுகொண்டே இருக்கட்டும். ஆனால், புயல் இங்கே உள்ளது, அது 24 மணி நேரத்திற்குள் டி.சி மீது இறங்குகிறது… இருட்டிலிருந்து வெளிச்சம்!” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பெண் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இறந்த ஆஷ்லி சுற்றுலா தொடர்பான பணிகளில் கடந்த 14 வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.

தீவிர ட்ரம்ப் ஆதரவாளர். இவர் அமெரிக்க விமானப்படையுடன் நான்கு சுற்றுப்பயணங்கள் செய்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், பெருநகர காவல் துறைத் தலைவர் ராபர்ட் ஜே கான்டி, இறந்த பெண் ஆஷ்லிதான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று கூறியுள்ளார்.

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...