உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவும் வெலிக்கடைச் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் சிக்கியுள்ளார்.
சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இன்று அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 30 பேர் கொரோனாத் தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ அவர்களில் 26 பேர் பெண் கைதிகள்இ 3 பேர் ஆண் கைதிகள் மற்றும் ஒருவர் சிறைச்சாலை அதிகாரியுமாவார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் அனைவரும் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.