January 26, 2021, 10:57 am

ஈழத் தமிழர்களை கைகழுவிய இந்திய அரசு – பழ. நெடுமாறன் கடும் அதிர்ப்த்தி!

“இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில்  அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அந்நாட்டு அரசுதான் முடிவெடுக்கவேண்டும்” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் அதிபரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இலங்கையில் வாழும் தமிழரை இன ரீதியாகத் திட்டமிட்டுப் பலவகையிலும் ஒடுக்கியும், அவர்களின் உரிமைகளை அடியோடு பறித்தும், அநீதியை இழைத்தும் வரும் இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எல்லாவற்றையும் வழங்கும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்திருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளியே நீதி வழங்குவார் என அமைச்சர் கூறியிருப்பது கேலிக் கூத்தாகும்.

1987ஆம் ஆண்டில் இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாட்டின் எந்தப் பிரிவையும் இலங்கை  அரசு இதுவரை நிறைவேற்றவில்லை, 13ஆவது சட்டத் திருத்தத்தை மதிக்கவும் இல்லை. இந்திய-இலங்கை அரசுகள் செய்துகொண்ட உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்தவேண்டிய இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அடியோடு கைகழுவி விட்டது என்பதையே வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...

டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

Stay Connected

6,385FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...

டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...