January 15, 2021, 3:47 pm

ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை வென்றிட ஒன்றிணைவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

2021ஆம் ஆண்டு ஏற்படுத்தப்போகும் சாவால்களை எதிர்கொண்டு ஈழத்தமிழர்களது அரசியல் வேணவாவை வென்றிட தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் செயற்படும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால், புத்தாண்டு-2021 ஐ முன்னிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை வென்றிட ஒன்றிணைவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வேணவாவினை வென்றிட தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் செயற்படும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய அதி முக்கிய காலகட்டமாக பிறக்கின்ற 2021 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. பூகோள அரசியலின் சூழ்ச்சுமங்களைப் புரிந்துகொண்டு தாயகத்தை வென்றெடுக்கும் தாயக்கட்டைகளை உருட்ட அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

கடந்து போனவை கடந்தவையாகவே இருந்துவிட்டு போகட்டும். நடந்து முடிந்தவை நடந்ததாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவற்றை கூறாய்வு செய்வதால் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகள்-தாமதங்கள் ஏற்படுமே தவிர வேறேதும் நிகழப்போவதில்லை. இருந்த போதிலும் கற்றுக் கொண்ட பாடங்களின் பட்டறிவு மூலம் அவை மீளவும் நிகழாமல் இருக்க மீள் உறுதி செய்வதும் தலையாய கடனாகும். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் காலத்தின் தேவை அறிந்து தான் பல மாற்று இயக்கங்களை ஒன்றிணைத்துத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினார்.

புரட்சி இயக்கங்கள் அழிக்கப்பட்டாலும் ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை.! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நடந்து முடிந்த, நடைபெற்று வரும் திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புடன் நேரடியாக தொடர்புபட்ட இனப்படுகொலையாளிகள் மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ள நிலையில், அதுவும் தனிச் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு தனிச்சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே பரிணமித்துள்ள ராஜபக்சகளின் காலமென்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் தீர்மானகரமிக்கதாக மாறியுள்ளது.

கடந்த 72 ஆண்டுகால இலங்கையின் சிங்கள பொளத்த பேரினாவத பேயாட்டம், தற்போது வெவ்வேறு நவீன வடிவங்களில் முழுவீச்சில் ஏலவே திட்டமிட்டு தமிழர் தாயகப் பகுதியெங்கும் ஆட்சி-அதிகார அலகுகளினூடாக நகர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளதை நன்கறிவோம்.

அது வெளிப்பார்வைக்கு தெரிய வரும்வரை காத்திருப்போமாயின் தமிழனத்திற்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகவே அமையும். சிங்களம் நாசூக்காகத் திட்டமிட்டு தமிழர் பிதேசம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. கிழக்கில் ஏற்கனவே வனவிலாகா, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் ஊடாகத் தமிழர்களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இலங்கைத் தீவின் ஆதிகுடிகளான தமிழ் மக்களின் இருப்பின் மூலாதாரமான மரபுவழித் தாயகம் துண்டாடப்பட்டும், கபளீகரம் செய்யப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வருகிறது. கொஞ்சம் தாமதிப்போமாயின் ஆண்ட பரம்பரையான தமிழினம் இலங்கைத் தீவின் அடிமை இனமாக மாறும் வரலாற்று துன்பியல் நிலைக்கே இட்டுச் செல்லும்.

நல்லெண்ணத்தை காண்பித்து காத்திருக்கின்றோம், எதற்கும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கின்றோம் என்ற பரீட்சார்த்த முடிவுகளை முன்னிறுத்தி ஒரே ஒரு நாள் பொழுதையேனும் வீணாக்க முடியாது. அவ்வாறு காத்திருபோர் கனவுகள் சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளால் நிச்சயம் கலைக்கப்படுவது திண்ணம். இதுவே வரலாற்றுப் பட்டறிவும் கூட.

புதிது புதிதாக ஒவ்வொருதரப்பார் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இது ஒன்றும் விளையாட்டு அல்ல. ஈழத்தமிழர்கள் நெருப்பாற்றில் நின்றுகொண்டு இருப்பையும் வாழ்வாதாரத்தையும் தொலைக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர்.

உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே! மேதகு வே. பிரபாகரன்

வடக்கு கிழக்கு இணைந்த ஈழத்தமிழர்களது மரபுவழித் தாயகம் உறுதி செய்யப்பட்டு, அதனடிப்படையில் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவும், தேசிய இனமாக ஏற்று சுய கௌரவத்துடன் எமது தலையெழுத்தை நாமே தீர்மானிக்கும் வகையிலான சுயாட்சி அதிகாரத்தை ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்க வேண்டியது ஒன்றுதான் எம் அனைவர் முன்பாகவும் உள்ள ஒரே தீர்வாகும்.

தமிழ்மக்களாகிய நாம் ஒரு தேசியக் கட்டமைப்பைக் கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக நாம் ஒரு தேசியமாகவே வாழ்ந்து வந்தோம், தேசியமாகவே வாழ்ந்து வருகின்றோம், தேசியமாகவே வாழப்போகின்றோம்! மேதகு வே. பிரபாகரன்.

தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தாயகம் மற்றும் புலம்பெயர் தளம் ஆகியவற்றில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய தரப்புகளிடையே தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இரண்டுபட்ட நிலைப்பாடு இருப்பதானது, தீர்வுக்கே விரும்பாத சிங்கள ஆட்சியாளர்களுக்கும், எம்மை முன்னிறுத்தி தத்தமது சுயலாப அரசியலை நிறைவேற்றத் துடிக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கும் ஏதுவான சூழலையே ஏற்படுத்திவிடும்.

இவ் வரலாற்றுப் படிப்பினையை முன்னிறுத்தி மேற்குறித்த ஒற்றை நிலைப்பாட்டினை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிப்போம் எனவும், அதன் மூலமாக பிறக்கின்ற 2021ஆம் ஆண்டு ஏற்படுத்தப் போகும் சவால்களை கடந்து, தமிழ் மக்களது இருப்பினையும், தமிழர் தாயகத்தின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய திடசங்கற்பம் கொள்வோம்.

நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட்டால் தான் நமது போராட்டத்தில் நம்மால் வெல்ல முடியும்..! விளாதிமிர் லெனின்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

Stay Connected

6,157FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

இந்தோனீசியாவில் பாரிய நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள்...