திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி வெளியாகியுள்ளது.
தற்பொழுது நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலையில் உள்ள நிலையில், அவர் யாழ்ப்பாணத்தில் உள்ளதுபோல் சித்தரித்து, யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு நீதிபதி புலம்பெயர்வாளர்களே காரணம் என நீதிபதி இளஞ்செழியன் கூறியதாக உண்மைக்கு புறம்பான செய்தியை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, நீதிபதியவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பை குறைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.