30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் திகதி அறிவிப்பு…

இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் ஜுலை 06 ஆம் திகதி வரை வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று (08) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 927 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் முதல் தடுப்பூசியாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் பிரகாரம் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு 12 வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் போது மிகவும் வீரியமான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப்பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும்.

ஏப்ரல் 23 ஆம் திகதியின் பின்னர் கட்டங்கட்டமாகவே இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 3,56,730 தடுப்பூசிகள் தொற்று நோய் பிரிவிடம் கையிருப்பில் உள்ளன.

9,24,627 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை தற்போதைய சூழலில் வழங்க வேண்டியுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை வழங்க கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 5,67,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் தேவைப்படும்.

இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உரிய துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

எதிர்வரும் வாரங்களில் குறித்த தடுப்பூசி தொகை கிடைக்கும்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் அனைத்தும் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்த பின்னர் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை தீர்மானிக்கும்.

தற்போது இந்த தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு வரை தடுப்பூசிகளுக்கு ஆயுட்காலம் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...

இலங்கை அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமனம்

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.ஏப்ரல் 25 ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரு...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...

இலங்கை அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமனம்

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.ஏப்ரல் 25 ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரு...

சிறப்புற இடம்பெற்ற சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள  உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளதுமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள  உயிரிழை முள்ளந்தண்டு...

துறைமுக சட்டமூல விவாதத்தில் தேசத்துரோகிகளை அடையாளம் காணலாம் – எல்லே குணவங்ச

துறைமுக நகரைச் சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்த பின்னர் தேசப்பற்றாளர்களையும், தேசத்துரோகிகளை அடையாளம் காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,துறைமுக...