இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 343 பேர் நேற்று (08) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,993 இலிருந்து 94,336 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 94,336 பேரில் தற்போது 2,699 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 91,044 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 593 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.