29.4 C
Jaffna
Wednesday, April 21, 2021

சிறுபான்மையினரின் அதிகாரங்களை அரசு பறிக்கிறது – வடிவேல் சுரேஷ்

இந்தியாவுடன் 13 பிளஸ் பற்றி பேசுபவர்கள் அதற்கு கீழ்மட்ட செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அதிகார பரவலாக்கம் வலியுறுத்தப்பட்ட போதிலும் , வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் வகையிலான செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தமிழ் கல்வி அமைச்சு காணப்பட்டது. எனினும் தற்போது மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 13 பிளஸ் பற்றி பேசுபவர்கள் அதற்கு கீழ்மட்ட செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர்.

சிறுபான்மையினர்களுக்கும் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தியே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் தற்போது அதிகார பரவலாக்கத்திற்கு பதிலாக அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் குறுகிய கால செயற்பாடுகளாகும்.

வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். மாகாணசபைத் தேர்தலுக்கு நாம் தயாராகவே உள்ளோம். மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் ஊவா மாகாணத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவோம். மத்திய மாகாணத்திலும் பாரிய வெற்றியை ஈட்டுவோம். இதன் மூலம் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெற்றுக் கொள்வோம் என்றார்.

Related Articles

இளம் வயதினருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள்…

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.நாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும்...

இரட்டை முகவராக செயற்படும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதென மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும்....

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இளம் வயதினருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள்…

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.நாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும்...

இரட்டை முகவராக செயற்படும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதென மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும்....

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...