28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

மாநகர காவல் படையால் பதறிய சிறிலங்கா காவல்படை

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று அறிவித்தார்.

அத்தோடு, இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த காவல் படையினர் நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, யாழ். மாநகர சபை ஆணையாளரை நேற்றைய தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்த காவல்துறையினர், நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

அதனை அடுத்து காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் காவல்துறையினர் ஆணையாளருக்கு பணித்திருந்தனர்.

அதன்பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் சீருடைகளும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக காவல் படையின் சீருடைகளை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...