28.9 C
Jaffna
Sunday, April 18, 2021

வெசாக்கை முன்னிட்டு வீடுகளுக்கு அத்திவாரம் நாட்டி வைப்பு!

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே 182 கிராம சேவையாளர் பிரிவில் புத்தசாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தே ஜெனரல் பிரியந்த பெரேரா வினால் நாட்டி வைக்கப்பட்டது

புத்தசாசன அமைச்சின் 6 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபை, ராணுவத்தினரால் கட்டி கொடுக்கப்படவுள்ள குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

நயினாதீவில் இரண்டு வீடுகளும் தெல்லிப்பழை மற்றும் உடுவிலில் தலா ஒவ்வொரு வீடுமாக யாழ்மாவட்டத்தில் நான்கு வீடுகள் தேசிய தினத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு கட்டிக் கொடுக்கப்படவுள்ளது எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த வீட்டின் கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

வீட்டுக்கு அடிக்கல் நாட்டிய பின் ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ் மாவட்ட இராணுவத் தளபதி

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் படை அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள் பிரதேச கிராம சேவகர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருகின்றோம்

இன்றைய தினம் மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கின்றோம் அதில் ஒரு வீடுதான் இந்த உடுவில் பிரதேசத்தில் இன்று அத்திவாரம் இடப்பட்டுள்ளது தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலையகத்தின் ஏற்பாட்டிலே வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன ஏற்கெனவே யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் 744 வீடுகள் வறிய மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல மேலும் 10 வீடுகள் வீடுகள் விரைவில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது அதேபோல் தற்போது தேசிய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 24ஆம் திகதி இந்த வீடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

அத்தோடு இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகத்தினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் அதேபோல் கர்ப்பிணித் தாய்மாருக்கு உலர் உணவு பொதிகள் என்பன இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்படுகின்றன

அதேபோல வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தொடர்ச்சியாக ராணுவத்தினரால் வறிய மக்களுக்கான உதவிகள் வடபகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Related Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் 9 பாடசாலைகள் உடைத்து திருட்டு ! – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த...

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்...