தேரர் ஒருவரிடம் 25 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த இரண்டு பேர் மொரட்டுவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் விசாரணை பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 25 இலட்சம் ரூபாவில் முதற்கட்ட தொகையாக 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபர்கள் மொரட்டுவையில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.