28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியாகவே தேர்தலில் போட்டி!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமன ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும், பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டதால் அமோக வெற்றிப் பெற முடிந்தது. கூட்டணியை பலப்படுத்தி மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் என பிராந்திய உறவுகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

கேகாலை நகரில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் தோற்றுவித்துள்ளார்கள். ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து பல சவால்களை எதிர்க் கொள்ள நேரிட்டுள்ளது. பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ் தாக்கம் வீழ்ச்சியடைந்திருந்த தேசிய பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது.

சிறந்த திட்டமிடலின் காரணமாக பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளை காட்டிலும் இலங்கை கொவிட்-19 வைரஸ் பரலவை கட்டுப்படுத்தி சர்வதேச மட்டத்தில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் வாழ மக்கள் தற்போது பழகிக் கொண்டுள்ளார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், குறிப்பாக மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வது மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதான பொறுப்பாகும்.

அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும். பொதுஜன பெரமுன இடம் பெற்று முடிந் த ஜனாதிபதி தேர்தலும், பொதுத்தேர்தலிலும் பங்காளி கட்சிகளை ஒன்றினைந்து கூட்டணியமைத்ததன் காரணமாக அமோக வெற்றிப்பெற்றது.

கூட்டணியில் பல கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இக்கருத்து வேறுப்பாடு அரசாங்கத்தை பலவீனப்படுத்த கூடாது என்பதை கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். இடம் பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Related Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...