29.4 C
Jaffna
Monday, April 19, 2021

நீதியரசர் மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டது சட்டவிரோதமானது – அலிசப்ரி

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகும்.

அதனால் இந்த தவறான நடவடிக்கையை சரிசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர் பிரமித் பண்டார தென்னகோனினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்புக்கு அமைவாக 2013 ஜனவரி 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கடந்த 2015 ஜனவரி 28 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் பி. அபேகோனின் கடிதம் ஒன்றின் மூலம் நீக்கப்பட்டுள்ளார்.

 நீதியரசர்களை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் நிலையியற் கட்டளைகளில் முறைமைகள் தெரிவிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரகாரமே முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டார்.

அத்துடன் சிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட  தீர்மானத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சவாலுக்குட்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஆராய உயர் நீதிமன்றம் 5 பேர் கொண்ட நீதியரசர் குழு நியமித்தது. அதன் பிரகாரம் சிராணி பண்டாரநாயக்க பிரதமர் நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சட்ட ரீதியிலானது என அந்த குழு தீர்ப்பளித்திருந்தது.

என்றாலும்  அரசியலமைப்புக்கு அமைவாக பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்த மொஹான் பீரிஸ் ஜனாதிபதி செயலாளரின் கடிதம் மூலம் நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது. அவ்வாறு நீக்கப்படுவதாக இருந்தால் பாராளுமன்ற குழு ஒன்றின் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும். எனவே இந்த தவறை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனால் இதுதொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி இந்த பிழையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...