30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

மன்னாரில் ஆயருக்கு மரியாதை செய்ய இலட்சக்கணக்கில் திரண்ட தமிழர்கள்

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று (05.04.2021)  மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு   துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை  நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் இறந்த ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இறுதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆயரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  3  மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்தி பவனியூடாக  கொண்டு செல்லப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் பல ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

-இன்று திங்கட்கிழமை அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் கருப்பு,வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் மன்னார் மறைமாவட்டம் சோக மயமாக காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு,தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...