29.4 C
Jaffna
Monday, April 19, 2021

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கட்டாயம் நீதியை பெற்று தர வேண்டும் என்கிறார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த பேராயர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துமாறு கோரினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு கட்சியின் தலைவராக எவ்வாறு தொடர்ந்தும் செயற்பட முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...