கொரோனாத் தொற்றுக்கு உள்ளான வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (03) யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
நோய்த்தாக்கத்துக்கு உட்பட்ட குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்டPCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 85 வயதான குறித்த பெண் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியைச் சேர்ந்தவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.