29.4 C
Jaffna
Monday, April 19, 2021

புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தி கொள்ளுமாறு கோரிக்கை!

தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை தமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம் கொவிட்19 தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருதொகை கொவிசீல்ட் தடுப்பூசி இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (31) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டாவது கொவிசீல்ட் தடுப்பூசியானது 10 வாரங்களுக்கும் 12 வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட வேண்டும். அதற்காக இரண்டு இலட்சத்து 30ஆயிரம் தடுப்பூசிகளை நாம் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோம். இவ் வாரத்தில் இந்தியாவிடமிருந்து ஒருதொகை தடுப்பூசி கிடைக்கப்பெறவுள்ளது.

கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழும் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 84 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்.

இதுவரை இத்திட்டத்தில் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகமானவர்களுக்கு ஒரு தடுப்பூசியை கொடுப்பதை விட சிலருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்தலாமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடுப்பூசிகள் பெற்றுக்கொண்ட தரப்பினரிடையே கொவிட்19 தொற்று பரவுவது குறைந்துள்ளது.

உலகில் கொவிட்19 மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது.

எனினும், தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளவர்களுக்கு 62 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை மக்கள் தொடர்ந்து பின்பற்றினால் மாத்திரமே தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் கொண்டாட்டங்களுக்கு செல்லாது தமது வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தளவு அனைவரும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...