யாழ்ப்பாணத்தில் அதிகரித்த கொரோனாத் தொற்று பரம்பலையடுத்து மூடப்பட்டிருக்கும் யாழ். வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என இன்று (31) வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருக்கும்.
நாங்கள் அதிகமான நபர்களிடம் PCR மாதிரிகளை எடுத்ததற்கு காரணம் கொரோனாவின் பரம்பல் தீவிரம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே.
இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் இதனை கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என தெரிவித்தார்.