தபாலகங்கள் திறக்கப்படாமையால் கிளிநொச்சியில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒருநாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபாலகங்கள் இன்று பூட்டப்பட்டுள்ள நிலையை அவதானிக்க முடிகின்றது. ஆயினும் உப தபால் அலுவலகங்கள் வழமைபோன்று இயங்குகின்ற போதிலும் பிரதான தபாலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. ஒருநாள் பணி பகிஸ்கரிப்பில் தபால் ஊழியர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தபாலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் சிரமங்களை இன்று எதிர்கொண்டமையை அவதானிக்க முடிகின்றது,