29.8 C
Jaffna
Sunday, April 18, 2021

குறைபாடுகளுடன் இயக்கப்படும் மன்னார் – யாழ் பேருந்து ! – பயணிகள் அதிருப்தி

மன்னாரில் இருந்து யாழ் நோக்கி இன்று அதிகாலை பயணித்த அரச பேருந்து இடை நடுவே நின்றதனால் அதில் பயணித்த பயணிகள் நடுவழியில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) அதி காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேருந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த நிலையில், ஜெயபுரம் பகுதியில் வைத்து பேருந்தின் சக்கரத்திற்கு காற்று போய் இடை நடுவில் நின்றுள்ளது.

இதனால் குறித்த பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் பிறிதொரு பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.

குறித்த பேருந்தானது நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது இல்லை எனவும், பல்வேறு குறைபாடுகளுடேனேயே இயக்கப்பட்டு வருவதாகவும் பயணம் செய்த பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

குறிப்பாக குறித்த பேருந்தின் உள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாத நிலையில் சேதமடைந்த நிலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துளள்னர்.

அதிகாலை புறப்படும் குறித்த பேருந்து சேவையில், யாழ் வைத்தியசாலைக்கு செல்வோர், திணைக்களங்களுக்கு கடமைகளுக்கு செல்வோரே வழக்கமாக பயணித்து வரும் நிலையில், இன்று இவ்வாறு இடைநடுவே நின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல முடியாது பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பேருந்துகளை சேவைகளில் ஈடுபடுத்துவதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்த பயணிகள் உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு மக்கள் போக்கு வரத்திற்கு உகந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...