அவிசாவளை பகுதியில் இரத்தினக்கல் சுரங்கம் ஒன்றில் சிக்குண்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவும் இதன்போது இரத்தினக்கல் சுரங்கத்தை பார்வையிட சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 41 மற்றும் 45 வயதானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.