யாழ். மாநகரின் முடக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்குமான PCR பரிசோதனை நாளை ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது.
காலை 7 மணிக்கு யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மூன்று இடங்களில் யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்படி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அனைவரும் குறித்த நேரத்திற்குத் தங்களது அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் தவறாது வருகை தந்து PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், யாழ். மாநகர சந்தைப் பகுயில் உள்ள வியாபாரிகள் இதுவரை PCR பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பின் அவர்களும் இந்தப் பரிசோதனையில் தவறாது கலந்துகொண்டு தங்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் யாழ். வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.