30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

இலங்கையில் தடுப்பூசி திட்டம் தோல்வியடையும் நிலையில்…

இந்திய அரசாங்கம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள பின்னணியில், இலங்கையில் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் தோல்வியடையும் நிலை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு, இரண்டாம் தடுப்பூசி உரிய முறையில் செலுத்தப்பட முடியாவிட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தோல்வியடையும் என கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலாவது தடுப்பூசி இன்னும் செலுத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உடன்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில்இ இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், நாட்டின் நிதியை செலவு செய்து மேற்கொள்ளும் நடவடிக்கை முழுமையாக தோல்வியடையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...