எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாடுமுழுவதும் வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கம், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக, அதன் செயலாளர் மஹேந்திர பாலசூரிய எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில், 3 ஆயிரம் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.