29.4 C
Jaffna
Monday, April 19, 2021

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை, பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டளவில் இந்த நாட்டின் மொத்தக்கடன் 15 ட்ரில்லியனாக இருந்தது. இவற்றில் தேசிய கடனாக 56 % சர்வதேச கடன் 44 % காணப்பட்டது. தற்போது தேசிய கடன் வீதமானது நூறுக்கு 110 % என்ற ரீதியில் காணப்படுகின்றது.

உலகில் நடுத்தர அபிவிருத்தி நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் லெபனானும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளது.

இந்நிலையில் கடன் நெருக்கடி இல்லை எனவும், இலகுவாக கடன்களைச் செலுத்துவோம் எனவும் அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

அதேபோல், 32 பில்லியன் டொலர் கைவசமாக இருக்கின்றது என அரசு கூறுவது உண்மையென்றால் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கேட்டமையும், தற்போது பங்களாதேஷிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ள பேச்சு நடத்துகின்றமையும் ஏன்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயம் ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்டதாக நினைத்தோம். ஆனால், கடன்களைக் கேட்கவே பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு வீழ்ச்சி கண்டுவிட்டோமா? இது நாட்டின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் செயலாகும்.

கடந்த ஆண்டில் 690 பில்லியன் ரூபாவைப் புதிதாக அரசு அச்சடித்தது. இதுவே ரூபாவுக்கான பெறுமதி வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

உலக நாடுகளில் அமெரிக்க டொலருக்கான பெறுமதி வீழ்ச்சி காணும் வேளையில் இலங்கையில் மாத்திரம் டொலருக்கான பெறுமது அதிகரிக்கின்றது. இதுவே அரசின் பொருளாதார முகாமைத்துவ பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...