இங்கிலாந்து அணிக்கு எதிரான, 5 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரை, 3 க்கு 2 என்ற அடிப்படையில், இந்திய அணி கைப்பற்றியது.
நேற்றைய இறுதிப் போட்டியில், 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதன் மூலம், இந்திய அணி தொடரை தம்வசமாக்கியது.
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய, அணித் தலைவர் விராட் கோலி, ஆட்டமிழக்காமல், அதிகபட்சமாக 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து, 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
ஆட்டநாயகனாக புவனேஸ்வர் குமாரும், தொடர் ஆட்ட நாயகனாக விராட் கோலியும் விருதுகளை வென்றனர்.